day, 00 month 0000

திருகோணமலையில் ஜனாதிபதி

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை இலக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமல் எதிர்கால சந்ததியினரை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் திருகோணமலையில் நேற்று (14)  நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்