// print_r($new['title']); ?>
day, 00 month 0000

8 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

அவுஸ்ரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய  வென்ற அவுஸ்ரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம்  செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை  எடுத்தது.
 
அதிகபட்சமாக மலான் 82 ஓட்டம்  எடுத்தார். இதனையடுத்து 179 ஓட்டம்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்ரேலிய அணி  களமிறங்கியது. அந்த அணி 20 ஓட்டம்  முதல் விக்கெட்டை(பிஞ்ச்) இழந்தது. அடுத்த ஓவரில் வார்னர் அவுட் ஆனார். அடுத்து வந்த மெக்ஸ்வெல் (8 )வந்த வேகத்தில் வெளியேறினார். 

இதனையடுத்து மிட்செல் மார்ஷ் – டிம் டேவிட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 45 ஓட்டம்  டிம் டேவிட் 40 ஓட்டம்  ஆட்டமிழக்க இறுதியில் அவுஸ்ரேலிய  அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டம்  எடுத்தது. 

இதனால் இங்கிலாந்து அணி 8 ஓட்டம்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக மலான் தேர்வு செய்யப்பட்டார். முதல் டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 ஓட்டம்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்