day, 00 month 0000

கூட்டமைப்பு மீது விமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவதொரு நாடகத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் இன,மத முறுகல்களை ஏற்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் முன்வைத்த கருத்தைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

குருந்தூர்மலை விகாரை என்பது இந்த நாட்டின் வரலாற்று விகாரையாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏதேனும் பௌத்த வழிபாட்டிடம் இருந்தால் அதற்குப் பிரச்சினைகளை ஏற்படுத்து கின்றனர். இடையூறுகளை விளைவிக்கின்றனர்.

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில், ஏதாவது ஒரு நாடகத்தைக் காட்டி இன, மத முறுகல்களை ஏற்படுத்துகின்றனர். தென்பகுதியிலுள்ள எந்தவொரு இந்து ஆலயம் தொடர்பிலும் எவராவது எதனைக் கூறுகின்றனரா? அல்லது பிரச்சினைகளை உண்டுபண்ணுகிறார்களா?- என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்