27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால், தீபாவளியன்று பாரம்பரியம் முறியுமா? ஐந்து பண்டிகைகளில் சூரிய கிரகணம் எது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் என பலருக்கும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. வட இந்தியாவைப் பொருத்தவரையில், தீபாவளியை ஒட்டி முக்கியமான 5 பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதில் எந்த மாறுதலும் இல்லை என்றாலும், மறுநாள் நடைபெறவிருந்த கோவர்தன் திருவிழா ஒரு நாள் பிறகு அதாவது அக்டோபர் 26 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும். சூரிய கிரகணம் ஏற்படவிருப்பதால், தீபாவளிக்கு மறுநாள் பண்டிகை கொண்டாடப்படாது.. அதே நேரத்தில், தேவ் தீபாவளியிலும் கிரகணம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இருப்பினும், கிரகணத்தை கருத்தில் கொண்டு ஒரு நாள் முன்னதாக தேவ் தீபாவளியை அனுசரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அமாவாசை திதியில்தான் சூரிய கிரகணம் உருவாகிறது. இந்த முறையும் ஐப்பசி மாத அமாவாசை அன்று, அதாவது அக்டோபர் 25 செவ்வாய்கிழமை சூரிய கிரகணம் ஏற்படுகிறது, இந்த சூரிய கிரகணம் டெல்லி உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தெரியும்.
இந்த முறை தேவதீபாவளி ஐப்படி மாத பெளர்ணமி அன்று கொண்டாடலாம் என்று காசியை சேர்ந்த பண்டிதர்கள் முடிவு செய்ததற்கான காரணம் தெரியுமா?
குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரிய கிரகணத்தால் 44 சதவீதம் வரை பாதிப்படையும். ஆனால் அதற்கு முன் சூரிய அஸ்தமனம் நிகழும் என்பதால் சூரிய கிரகணத்தின் பாதிப்பு இந்தியாவில் இருக்காது. ஜோதிஷாச்சார்யா விபோர் இந்துசுட், பாரத் ஞானபூஷன் மற்றும் ஆச்சார்யா மனிஷ் சுவாமிகளின் கூற்றுப்படி, தீபாவளி வழிபாடு மற்றும் பையா தூஜ் ஆகிய பண்டிகைகள் வழக்கம்போலவே கொண்டாடப்படும். ஏனென்றால், தீபாவளி நள்ளிரவுக்குப் பிறகுதான் சூதக் காலம் தொடங்கும்.