day, 00 month 0000

வீட்டில் விளக்கேற்ற எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?

நமது வீடுகளில் தினமும் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி வழிபடுவதுண்டு. ஏனென்றால், இறைவழிபாட்டுக்கு மிகவும் முக்கியமான பூஜை முறைகளில் விளக்கு வைப்பதும் ஒன்று.

நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். வீட்டை தூய்மை படுத்தி தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என பெரியவர்கள் கூறுவதுண்டு. விளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் வீடுகளில் விளக்கேற்றும் போது வீடு லட்சுமி கடாட்சமாக உள்ளது என்பார்கள்.

அதுமட்டும் அல்ல, தீப ஒளி தீய சிந்தனைகளை அகற்றுகிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வசிப்பதாக கூறப்படுகிறது. அதே போல, தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் இருப்பதாக கூறப்படுகிறது. தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் அருளையும் நாம் பெறலாம்.

திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற பெரியவர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால், பசு நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம்.

விளக்கேற்றும் எண்ணெய்களும் அதன் பயன்களும்..

* இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் நம் வாழ்வில் கலக்கங்கள் தீரும்.

* நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும்.

* நல்லெண்ணையில் விளக்கேற்றினால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

* விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் வியக்கும் அளவிற்கு புகழ் கூடும்.

Also Read | மேஷத்திற்கு செல்லும் குரு... கஜகேசரி ராஜயோகம் யாருக்கு?

* இலுப்பை எண்ணையில் விளக்கேற்றினால் ஆரோக் கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

* தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றினால் தடைகள் அகலும்.

* பஞ்சினால் ஆன திரியில் தீபம் ஏற்றினால் வாழ்வில் நல்ல காரியங்கள் நடைபெறும்.

* தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.

* வாழைத்தண்டு நாரினால் உருவாக்கப்பட்ட திரியில் தீபம் ஏற்றினால் வாரிசுகள் உருவாகும்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்