ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென அதன் தலைவர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இனத்தையோ, எந்தவொரு மதத்தையோ இலக்கு வைத்து பரிந்துரைகள் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இந்த செயலணி நிறுவப்பட்டதுடன் இதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதே வேளை ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த போவதில்லை என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த அறிக்கைப் பரிந்துரைகளில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும், இது குறித்து விமர்சனங்களை வெளியிடும் தரப்பினர் முதலில் அறிக்கையை நன்றாக படித்து புரிந்து கொள்ள வேண்டுமெனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் வகையிலானது என விமர்சனங்கள் வெளியிடப்பட்ட பின்னணியில் ஞானசார தேரர் இந்த கருத்துக்களை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.