// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை

அவுஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையை தமது அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்க போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த குழு, சிட்னியில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடம் உறுதியளித்துள்ளது.

சட்ட சபை உறுப்பினர்கள் பீட்டர் பிரிம்ரோஸ் மற்றும் அந்தோனி டி அடம்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமி பார்க்கர் ஆகியோர் ஜகத் பண்டார என்பவர் தலைமையிலான இலங்கைக் குழுவை செப்டெம்பர் 21 புதன்கிழமை நாடாளுமன்ற கட்டிடத்தில் சந்தித்து இந்த உறுதியை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் ஜகத் பண்டார தெரிவிக்கையில்,“இலங்கையில் நடைபெற்ற அமைதியான போராட்டங்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் ஒடுக்குவது குறித்து, நாடாளுமன்ற பிரதிநிதிகளிடம், விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தாம், சமர்ப்பித்த அறிக்கைகள் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜேமி பார்க்கர் தங்களுக்கு உறுதியளித்ததாகவும், இலங்கையில் தற்போது நிலவும் நிலைமை குறித்து அவர்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகாலச் சட்டங்கள் என்ற போர்வையில் இலங்கைப் படைகள் போராட்டக்காரர்களை மாதக்கணக்கில் தடுத்து வைத்து துன்புறுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க இலங்கைப் புலம்பெயர்ந்தவர்கள், விரைவில் அவுஸ்திரேலிய சமஷ்டி நாடாளுமன்றத்தின் கூட்டாட்சி உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளனர்.”என கூறியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்