// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஆசியக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கையும், பாகிஸ்தானும் தகுதி பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் வென்றமையைத் தொடர்ந்தே இலங்கையும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதேவேளை, நடப்புச் சம்பியன்களான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

சுப்பர் 4 சுற்றில் நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இலங்கையும், பாகிஸ்தானும் இரண்டிலும் வென்றுள்ள நிலையில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இரண்டிலும் தோற்றுள்ளன. ஆகையால் மீதவுள்ள அனைத்து அணிகளினதும் எஞ்சிய போட்டியானது இறுதிப் போட்டிக்கான தகுதியில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது.

மேற்குறிப்பிட்ட போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் பாபர் அஸாம், தனதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், இப்ராஹிம் ஸட்ரான் 35 (37), ஹஸரத்துல்லா ஸஸாய் 21 (17), ரஷீட் கான் ஆட்டமிழக்காமல் 18 (15), ரஹ்மனுல்லா குர்பாஸ் 17 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹரிஸ் றாஃப் 2/26 [4], நசீம் ஷா 1/19 [4], மொஹமட் நவாஸ் 1/23 [4], ஷடாப் கான் 1/27 [4], மொஹமட் ஹஸ்னைன் 1/34 [4] என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு 130 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், முதலாவது ஓவரிலேயே அஸாமை பஸல்ஹக் பரூக்கியிடம் இழந்ததுடன், சிறிது நேரத்தில் பக்கர் ஸமன் ரண் அவுட்டானார். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் 20 (26) ஓட்டங்களுடன் ரஷீட்டிடம் மொஹமட் றிஸ்வான் வீழ்ந்தார்.

இதையடுத்து இனிங்ஸை நகர்த்திச் சென்ற இஃப்திஹார் அஹ்மட் 30 (33) ஓட்டங்களுடனும், ஷடாப் கான் 36 (26) ஓட்டங்களுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் பரீட் அஹ்மட், ரஷீட்டிடம் வீழ்ந்தனர். அடுத்த ஓவரில் நவாஸும், குஷ்டில் ஷாவும் பரூக்கியிடம் வீழ்ந்ததோடு, அதற்கடுத்த ஓவரில் றாஃப், 16 (08) ஓட்டங்களைப் பெற்ற ஆசிஃப் அலி அஹ்மட்டிடம் வீழ்ந்தனர்.

இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவையாக இருக்க, முதலிரண்டு பந்துகளிலேயே நசீம் ஷா பெற்ற அடுத்தடுத்த ஆறு ஓட்டங்களால் 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை பாகிஸ்தான் அடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷடாப் கான் தெரிவானார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்