// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழ்.வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா 24 ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

இத்திருவிழா செப்டம்பர் 24ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்தை சுகாதார முறைப்படி நடத்த மகோற்சவ கால முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டம் தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானம் செப்டம்பர் 2ம் திகதி வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்ற மகோற்சவ கால முன்னாயத்த ஏற்பாட்டுக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கூட்டத்தின் இறுதியில் ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.  ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, “சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியமானதாக கருதப்படுவதுடன், பக்தர்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

ஆலய சுற்றாடலில் உணவு கையாளும் நிலையங்கள் அமைப்பவர்கள் நாட்டின் எப்பாகத்திலாவது பதிவு செய்யப்பட்ட உணவுச்சாலைகள் நடத்துபவர்களாக இருத்தல் வேண்டும்.

சகல உணவு கையாள்பவர்களும் தாங்கள் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட உணவுச்சாலை அமைந்துள்ள பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ் பெற்றிருப்பதுடன் அதனை தங்களுடன் வைத்திருத்தல் வேண்டும்.

பொதுச்சுகாதார பரிசோதகரின் கண்காணிப்புக்கு உட்பட்ட கிணறுகளிலிருந்து பெறப்படும் குடிநீரையே உபயோகித்தல் வேண்டும்.

ஆலயச்சுற்றாடலில் இனிப்புக்கடைகள், கச்சான் விற்பவர்கள் உற்பத்தியை இவ்விடங்களில் மேற்கொள்ள முடியாது. விற்பனையை மட்டும் செய்யமுடியும்.(கச்சான் வறுத்தல் இனிப்பு பண்டங்கள் தயாரித்தல்), அன்னதான மடங்களில் கடமையாற்றுபவர்கள் மருத்துவச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

சகல கடை உரிமையாளர்களும் ஒவ்வொரு நாளும் வரும் கழிவுகளை வெளியில் வீசாது ஒன்றாகச் சேர்த்து பிரதேச சபை வாகனத்தின் மூலம் அகற்றுதல் வேண்டும்.

பச்சை குத்துதல், காதுகுத்துதல் போன்ற செயற்பாடுகள் ஆலயச்சுற்றாடலில் அனுமதிக்கப்படமாட்டடாது, போதைபொருட்கள், புகைத்தல், மதுபாவனைப் பாவனை, விற்பனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒக்டோபர் 1ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், ஒக்டோபர் 2ம் திகதி வெண்ணைத் திருவிழாவும், ஒக்டோபர் 3ம் திகதி துகில் திருவிழாவும் மற்றும் ஒக்டோபர் 4ம் திகதி பாம்பு திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மேலும், கம்சன் போர்த்திருவிழா ஒக்டோபர் 5ம் திகதியும் வேட்டைத்திருவிழா ஒக்டோபர் 6ம் திகதியும்,சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ம் திகதியும், தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் மற்றும் சமுத்திரத் தீர்த்தத்திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதி காலையும் அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறவுள்ளதாக தீர்மானிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்