கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரின் இறுதிகிரியைகள் ஓட்டவாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் கனடாவின் பௌத்த பேரவை, ஒட்டாவாவின் ஹில்டா ஜயவர்தனராமம் நன்கொடையாளர் சபை மற்றும் கனடாவில் வாழும் இலங்கையர்கள் மற்றும் கனேடிய சமூகத்தினரின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் தப்பிய தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது குடும்பத்தினருடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார். இது பார்ப்பவர்கள் மனதை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வமத பிரார்த்தனையின் பின் நல்லடக்கம்
ஆறு பேரின் இறுதிகிரியைகள் சர்வமத வழிபாட்டையடுத்து நல்லடக்கம் செய்யப்படும் என கனடா பௌத்த சங்கம் ஒன்று வெளியிட்டிருந்தது.இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய கனடாவில் அவர்களின் பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொடரும் விசாரணைகள்
இந்த சம்பவத்தின் கொலை குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் 19 வயதுடைய டி சொய்ஸா என்ற இளைஞன் கைது செய்யப்பட்டார். தற்போது டி சொய்ஸா பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.