கனடாவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன்னர் கலந்துகொண்ட வைபவம் ஒன்று தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பெட்ரிகோ டி சொய்சாவின் 19வது பிறந்தநாள் அங்கு கொண்டாடப்பட்டதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலைகள் இடம்பெற்ற வீட்டியேலே இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது டி சொய்சா சீஸ் கேக் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டதாகவும், அதன்படி தனுஷ்க மற்றும் குடும்பத்தினர் அவருக்கு சீஸ் கேக்கை வழங்கியதாகவும் தனுஷ்கவின் குடும்ப நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த படுகொலை சம்பவத்தின் போது காயமடைந்த தனுஷ்க விக்கிரமசிங்க வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு கனடா - ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 19 வயதான பெட்ரிகோ டி சொய்சா என்ற இளைஞன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.