சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் ஹாட்ரிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை மஹ்முதுல்லா ரியாத் பதிவு செய்துள்ளார்.
பங்களாதேஷுக்கு எதிரான இலங்கையின் சமீபத்திய போட்டியின் போது இந்த வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த போட்டியில் நுவான் துஷாரா மூன்றாவது ஆட்டமிழப்பாக மஹ்முதுல்லாவின் விக்கெட்டைப் பெற்று ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.
இதேவேளை 2015 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, இதேபோன்ற வெளியேற்றங்களைத் தொடர்ந்து, ககிசோ ரபாடா மஹ்முதுல்லாவுடன் இறுதி விக்கெட்டாக ஹாட்ரிக் எடுத்தார்.
மேலும் 2020 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது நசீம் ஷா மஹ்முதுல்லாவை ஆட்டமிழக்கச் செய்து தனது ஹாட்ரிகை எடுத்துள்ளார்.
இதற்கமைய, மூன்று நிகழ்வுகளிலும், மஹ்முதுல்லாவின் வெளியேற்றம் பந்து வீச்சாளருக்கான ஹாட்ரிக் முத்திரையை வழங்கியுள்ளது.