வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால் ஆலயநிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து வவுனியா நீதிமன்றில், ஆலயநிர்வாகம் சார்பாக கடந்தவாரம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் நேற்று மன்றில் இடம்பெற்றபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாராதிபதி, வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி நிகழ்வை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகிறார் என ஆலய நிர்வாக சபை உறுப்பினர் தமிழ்ச் செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.