day, 00 month 0000

கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையாகப் போவதில்லை

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையாகப்போவதில்லை என சட்டமா அதிபர் நேற்று (26) உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது , ​​ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்