day, 00 month 0000

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கை: வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் அழைப்பு

வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்கு முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பணிகளில் இராணுவம் தலையிடுமானால் குறித்த வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என நேற்றைய தினம் சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் அறிவித்திருந்தார்.

அத்துடன், தன்னார்வ சேவைகளில் இருந்து விலகி செயற்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்