day, 00 month 0000

சாந்தனை மீட்டுத் தாருங்கள்! தாய் கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன்  கடந்த ஆண்டு இந்திய மத்திய அரசினால்  விடுதலை செய்யப்பட்டார்.  எனினும் விடுதலைக்குப் பின்னர்,  இலங்கைக்கு அவரை மீள அனுப்புவதற்கான  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக்  கூறி கடந்த 10 மாத கால பகுதிக்கு மேலாக திருச்சி சிறப்பு முகாமில்  அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தனது மகனை இலங்கைக்கு  மீள அழைத்து வந்து தன்னிடம் ஒப்படைக்குமாறு சாந்தனின் தாயார் கடந்த 10 மாத காலமாக  பல்வேறு தரப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றார்.

குறிப்பாக இது குறித்து கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை அவர் விடுத்திருந்தார்.

எனினும் குறித்த  கடிதத்திற்கு இது வரையில் வெளிவிவகார அமைச்சிடம் இருந்து எந்த  பதிலும்  வரவில்லை எனவும் , 10 மாத காலப்பகுதிக்குள் 5 கடிதங்களை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியும் பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர்  கவலை தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்