பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சனல் 4 தொடர்பில் விசாரணை அவசியம் என ஐநாவும் வலியுறுத்தியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதியை சந்தித்து, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
4 வருடங்களாக என்னை இலக்கு வைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நடந்தது என்ன என்பது சனல்4 காணொளி ஊடாக தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.