day, 00 month 0000

டென்மார்க் நீதிமன்ற யூரராக ஈழத்தமிழர் தர்மகுலசிங்கம் நியமனம்

டென்மார்க் நாட்டின் ,வயன் நகரத்தில் வாழ்ந்துவரும் புலம்பெயர் தமிழரும் சமூக செயற்பாட்டாளருமான தருமன் தர்மகுலசிங்கம் வெஸ்டெர் லான்ட் நீதிமன்றத்தின் யூரராக மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் சோசல் டெமக்கிரட்டி கட்சியின் முக்கிய உறுப்பினரான தருமன் தர்மகுலசிங்கம்,கடந்த 12 வருடங்களாக நீதிமன்ற யூரர் பதவி வகித்துவந்த நிலையிலேயே அவருக்கு இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

டென்மார்க் நாட்டின் மிகப்பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றமாக வெஸ்டெர் லான்ட் நீதிமன்றம் திகழ்கிறது. இவ்வாறான ஒரு முக்கியமான  நீதிமன்றத்தில் தமிழர் ஒருவர் யூரர் பதவிக்கு நியமனமாகியிருப்பது உலக தமிழருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

டென்மார்க் நாட்டின் அரசியல்,சமுதாயம்,கலை-இலக்கிய வரலாற்றில் பல காத்திரமான பணிகளை செய்துவரும் தர்மகுலசிங்கம்,டெனிஸ் மொழியின் அற்புதமான படைப்புகளை படைத்த அனசன் கதைகளை தமிழ் இலக்கிய உலகுக்கு கொடுத்துள்ளார்.

அத்துடன்,2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில், இவர் தலைமை தாங்கிய லயன் நகர கலை இலக்கிய மன்றம் இலங்கைக்கு சமாதான பயணத்தை மேற்கொண்டு,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவரையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள தர்மா தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் தமிழர்கள் நீதியின் பாதையில் பயணிக்கிறார்கள் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.சிறுபராயம் முதல் இடதுசாரி கொள்கையை பற்றிப்பிடித்துக்கொண்டிருந்த அவர்,இன்று ம்   அதே பாதையிலேயே பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்