day, 00 month 0000

மைத்திரியுடன் கூட்டணி இல்லை;சஜித் அதிரடி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ அல்லது தலைமையிலான கட்சியுடனோ எதிர்வரும் தேர்தல்களில் எந்த விதத்திலும் கூட்டணியை அமைப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனின் அரசியல் கொள்கைகள் மற்றும் அவரது அரசியல் பயன்பாடு தொடர்பான ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது.

இதனால், அவருடன் எந்த அரசியல் கொடுக்கல், வாங்கல்களையும் மேற்கொள்ளக்கூடாது என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கட்சியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்தன் காரணமாகவே தயாசிறி ஜயசேகர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பிக்க மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து சென்று அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பிரதிநிதிகளுடன் இணைந்து காய்களை நகர்த்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்