day, 00 month 0000

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது தருணமல்ல - பொதுஜன பெரமுன

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது உரிய தருணமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர்  சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது பொருத்தமான தருணமிலலை என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக  சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ள பொதுஜனபெரமுனவின் பிரிவும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.

பலவீனமான பொருளாதார நிலை காரணமாக அரசாங்கமே நெருக்கடியான நிலையில் உள்ள இந்த தருணத்தில்  அரசாங்கம் 13 வதுதிருத்தத்தை விஸ்தரிப்பதற்கு இணங்கினால்  அரசாங்கம் தேவையற்ற அழுத்தத்தி;ற்குள்ளாகலாம் என  சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்

நாடு வலுவான பொருளாதாரநிலையில் உள்ளவேளை 13வதுதிருத்தத்தை விஸ்தரிப்பது குறித்து சிந்திக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்