day, 00 month 0000

யாழ்ப்பாணத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லட்சுமி நாணயங்கள் கண்டுப்பிடிப்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டவரும் அகழ்வாராய்ச்சியில் கி.பி. 1ஆம் மற்றும் கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லட்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆராய்ச்சி இணைப்பாளர் , இலங்கையின் புதிய கூட்டு திட்ட இணைப்பாளர் கலாநிதி அரெய்ன் டி சாக்சே, கலாநிதி நிமல்பெரேரா , இலங்கை தொல்பொருள் திணைக்கள முன்னாள் உதவிப்பணிப்பாளர் , யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் , மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இணைந்து கடந்த ஒரு மாதகாலமாக கந்தரோடையில் அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் போது , கி.பி. 1ஆம் - கி.பி. 3ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டதாக கருதப்படும் ஐந்து லட்சுமி நாணயங்களை மீட்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

1917ஆம் ஆண்டு கந்தரோடை பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட "போல் பீரிஸ்" நாணயங்கள் சிலவற்றை கண்டு பிடித்த போது , அவற்றில் பெண்ணொருவர் தாமரை மலர் மீது நிற்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டதை ஆதாரமாக காட்டி , அதற்கு லட்சுமி நாணயம் என பெயர் வைத்தார். 

இந்தப் பின்புலத்தில் மீண்டும் கந்தரோடையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளிலேயே இந்த நாயணங்கள் மீட்கப்பட்டுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்