day, 00 month 0000

விராட் கோலி கிடையாது... இவர் தான் நம்பர் 1 துடுப்பாட்ட வீரர்: சமீந்தா வாஸ்

கிரிக்கெட் உலகின் தற்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேன் குறித்த விவாதத்தில், இந்திய வீரர் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பெயர்கள் எப்போதும் அடிப்படும்.

இருவரில் யார் நம்பர் 1 என சமூகவலைதளங்களில் சண்டை கூட நடக்கும்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானும், லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான சமீந்தா வாஸ் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ”பாபர் ஆசாமை எடுத்துக் கொண்டால், தற்போது அவர் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அவர் செயல்படும் விதம் மற்றும் அணிக்கு பங்களிக்கும் விதம் அற்புதமானது.

எல்லா இளைஞர்களும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடுவதைப் பார்க்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்