day, 00 month 0000

13 தொடர்பில் மோடி கூறியது ரணிலுக்கு விளங்கியிருக்கும் - விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது பிரதமர் மோடி 13 தொடர்பில் கூறியதுஅவருக்கு நன்குவிளங்கியிருக்கும்  என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (04)  யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் அவர்களால் அனுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவரது உரை எவ்வாறு இருக்கும் என ஊடகவியலாளர் விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பினார்.

இதன்போது, பதில் அளித்த விக்னேஸ்வரன் எம்பி ரணிலின் உரை எவ்வாறு இருக்கும் என உரையாற்றிய பின்னரே கருத்து கூற முடியும்.

13 வது திருத்தத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடி ரணில் விக்ரமசிங்கவிடம் நேரிலே தெரிவித்துவிட்ட நிலையில், பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நானும் கலாநிதி விக்னேஸ்வரனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவான வரைவு ஒன்றை வழங்கிய நிலையில் அது பற்றி இந்தியப் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி ரணில் பேசினார்.

13 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது கம்மன்பில போன்ற சிலர்  முதல் ஒரு கருத்தை கூறுவார்கள் பிறகு ஒரு கருத்தை கூறி குழப்புவார்கள் என எமக்குத் தெரியும்.

இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட இரு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை ஏற்க முடியாது என எளிதில் தட்டி கழித்து விட முடியாது.

இறுதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது 13 வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சிலர் எதிர்க்கிறார்கள் என காரணம் காட்டி பின் வாங்க கூடாது என அவரிடம் கூறினேன்.

அன்றைய சந்திப்பில் சிங்களத் தலைவர்கள் என்னுடன் கலந்துரையாடிய போது நான் முன்வைத்த இந்திய பாண்டிச்சேரியில் நடைமுறையில் உள்ள பட்டன் பொல்லுடனான பொலிசை தாங்கள் ஏற்பதாக தெரிவித்தனர்.

ஆனால் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அது பற்றி என்னிடம் பேசவும் இல்லை ஜனாதிபதியின் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கவும் இல்லை.

பதின் மூன்று வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டும் உரித்துடையதல்ல இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணத்திற்கும் பொதுவான விடயம்.

நான் அறிந்த வரையில் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட மாகாணங்களில் பொலிஸ் அதிகாரத்தை  விரும்புகின்ற நிலையில் அவர்களின் கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

 ஆகவே குறித்த விடயம் தொடர்பில் இந்தியா பிரதமர் கூறிய விடையங்களை ரணில் விக்கிரமசிங்க தெளிவாக உள்வாங்கி இருப்பார் என்று நம்பிக்கையுடன் பாராளுமன்றத்தில்  என்ன செய்யப் போகிறார் என்பதை பெறுத்திருந்து பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்