day, 00 month 0000

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு படகின் மூலம் கடத்திவரப்பட்ட தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அண்மை காலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம், போதை பொருள் கடத்தல் என்பன வெகுவாக இடம்பெற்று வருகின்றன. இப்பகுதியில் கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, நேற்று 4 கோடி ரூபா மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்திய படகில் பயணித்த நான்கு பேரை கைது செய்து,மேலதிக விசாரணைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏழு மாதங்களில் இலங்கையில் இருந்து 40 கோடி ரூபாய் மதிப்பிலான 70.900 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்