விமானத்திற்கு எரிபொருளை நிரப்பவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தாகவும் எனினும் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் 75 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வந்தார் எனக்கூறி பிரசாரம் செய்து வருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள கம்மன்பில, பிரான்ஸ் ஜனாதிபதி ஒன்றரை மணி நேரம் மாத்திரமே இலங்கையில் தங்கியிருந்தார் எனவும் கூறியுள்ளார்.
தனது விமானத்திற்கு எரிபொருளை நிரப்பவே பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கையில் தரையிறங்கினார்.
ஒன்றரை மணி நேரம் மாத்திரமே விமான நிலையத்தில் தங்கியிருந்தார்.
75 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கை விஜயம் செய்ததாக கூறி பிரசாரம் செய்து, பிரசார பயனை பெற்றனர்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின் மூலம் நாட்டிற்கு கிடைத்த நன்மை என்ன என்பதை முடிந்தால் அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.