cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் இந்தியாவோடு கைகோர்ப்போம் - செல்வம் எம்.பி பகிரங்கம்

இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(29.07.2023) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம்

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் இந்த அரசாங்கத்தின் அதிகளவான அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரியாக காட்டுக்கின்ற செயற்பாடுகளையே சிங்கள தலைவர்கள் முன்னெடுத்துவருகின்றனர். சிங்களத் தலைவர்களின் பலரின் மூளையில் இருப்பதெல்லாம் தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மாத்திரமே.

 

எமது இனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நினைக்கின்ற அரசாங்கம் எவ்வாறு தமிழர்களுக்கான தீர்வைத் தர முடியும். வெறும் வெற்றுப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல், உதட்டளவில் பேசிக் கொள்ளாமல் எமக்குள் பல வேற்றுமைகள் இருந்தாலும் எமது மக்களுக்காக நாம் ஒற்றுமைப் பட வேண்டும்.

இனப்பிரச்சனைக்கான தீர்வு

இந்த ஒற்றுமை புலம்பெயர் தேசத்து கட்டமைப்புகளும் ஒன்றுபட வேண்டும். அவர்களுடன் நாங்களும் இணைய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்ட்மைப்பு தமிழ் நாட்டினை எந்தளவு பயன்படுத்தியது என்று பார்த்தால் அது பூச்சியமாகும்.

அத்தோடு உதட்டளவில் தேசியம் பேசாமப் அனைவரையும் ஒன்றினைக்கின்ற செய்றபாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் செய்யும்.

இந்த நாட்டை மேலெ கொண்டு வருவதாக இருந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கி 13வது திருத்தத்தினுடைய சரத்துகள் அனைத்தையும் பூரணமாக நடைமுறைப்படுத்தினால் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து முதலீடுகளை நாங்களே பெற்று நாட்டை வலுவாக்க முடியும்.'' என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்