நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும்
இனவாதத்தை கொண்டு இலங்கையில் ஆட்சி அமைத்தவர்கள்! சரத் பொன்சேகாவின் தகவல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு அதிகார பகிர்வை மேற்கொள்வது? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் அதை செயல்படுத்துவது என்பது தொடர்பில் சிந்தித்து, நிதானமாக செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும்.