day, 00 month 0000

சைவ நாடாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்தியா

சைவப்பிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் வரை அசைவ உணவுகளை உண்பதில்லை எனத்தெரிய வந்துள்ளது.

பல்வேறு விடயங்களில் புள்ளி விவரங்களை சேகரிக்கும் உலக அளவிலான அமைப்பு தகவலின் படி மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவம் உண்பவர்களாக உள்ளனர்.

தாய்வானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும், அவுஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும் சைவப்பிரியர்கள்.

சைவப்பிரியர்கள் மிகவும் குறைவாக உள்ள நாடு ரஷ்யா ஆகும்.

அங்கு 1 சதவீதம் பேரே சைவம் சாப்பிடுகிறார்கள். மீதி 99 சதவீதம் பேர் அசைவம் உண்கிறார்கள். அப்படியென்றால் உலகின் 'அசைவ நாடு' ரஷ்யா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவில் தலா 5 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுவதில்லை.

அதே போல இங்கிலாந்தில் 10 சதவீதம் பேரும், ஜப்பானில் 9 சதவீதம் பேரும் அசைவம் சாப்பிடுவதில்லை.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்