நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நிதி சட்டமூலம் ஒன்றை தோற்கடித்து அரசாங்கத்தை கலைப்பது தொடர்பான இரகசிய பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட முன்னாள் அமைச்சர் ஒருவரே இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கி வருவதாகவும் பேசப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த அரசியல்வாதி, தனது மகனுக்கு மேற்குலக நாடு ஒன்றின் தூதரகம் ஒன்றின் தலைமை செயலாளர் பதவியை பெற அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரவு செலவுத்திட்டத்திற்கு மேலதிகமான நிதி சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால், பிரதமர் உட்பட அமைச்சரவையை கலைக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.