யுனெஸ்கோ “மஹாவம்சத்தை” உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றி மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுக் கவிதையாகும்.
அது கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 1815 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியதாக இயற்றப்பட்டது.
அதன்படி, யுனெஸ்கோவினால் 2023ல் புதிதாக அறிவிக்கப்பட்ட 64 உலக சர்வதேச ஆவணப்பட மரபுச் சின்னங்களில் மகாவம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.