சில சர்வதேச விவகாரங்களில் இலங்கை எடுத்துள்ள சமநிலையான நடுநிலையான நிலைப்பாட்டை இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவென் ஜகாரியன் பாராட்டியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற சுதந்திர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான மேற்குலகின் முயற்சிகளை அவர் கண்டித்துள்ளார்.
மேற்குலக நாடுகள் தங்களின் உள்விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள ஜகாரியன் இறைமையுள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.