யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று நண்பகல் 12.00 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்த விழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இரவு சப்பரதத் திருவிழாவும், மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் அன்று இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
மறுநாள் செவ்வாய்க்கிழமை பிரசித்தி பெற்ற தெப்போற்சவம் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கு முன்பு சில நாகங்கள் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.