day, 00 month 0000

வட-கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க ரணிலுக்கு ஆணை இல்லை

இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுமதி வழங்கப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை 

வழங்குவது தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தானும், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் கருத்துக்ளை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாண சபைகளுக்கு இது வரை எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் வடக்கு, கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் 

விக்ரமசிங்கவிற்கு ஆணை இல்லை என சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்ததாக சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு அதிகாரங்களை அவர் வழங்கவேண்டுமானால் ரணில் புதிய ஆணையை பெற்றுக்கொள்ளவேண்டும் என சரத் வீரசேகர தெரிவித்ததாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்