// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அரசுக்கு சாதகமான செய்திகளுக்கு மாத்திரம் அனுமதி! சித்தார்த்தன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மூலம் அரசாங்கம் ஊடகங்களை கட்டுப்படுத்தி தமக்கு சாதகமான செய்திகளை மாத்திரம் வெளிக்கொண்டுவர முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்  மேலும் தெரிவிக்கையில்,

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம் கட்டாயமாக ஊடகங்களை கட்டுப்படுத்தும். இதன்மூலம் தொலைக்காட்சி ஊடகங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.

இந்த சட்டம் மூலம் அரசாங்கத்துக்கு சாதகமான செய்திகளை தவிர, அனைத்து செய்திகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படுமென்று அவர் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்