day, 00 month 0000

சர்வதேசத்தின் கோரிக்கையை அலட்சியம் செய்த ரணில்

வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை மேலதிக விசாரணைக்காக 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி கொழும்பில் மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே உட்பட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தவிர்ந்த 15 பேர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஒருவரை வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உத்தரவை அடுத்து 90 நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்