// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழ் ஒவ்வொரு இந்தியரின் மொழி

தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியருடைய மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

முதலாவதாக ஜப்பான் சென்று, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டார். இதில் முக்கிய உலக அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.  தொடர்ந்து பப்புவா நியூ கினியாவில் இந்தியா- பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

இந்நிலையில் மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் டெல்லி விமாநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்வில், “தமிழ் மொழி நம்முடைய மொழி. உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ். ஒவ்வொரு இந்தியருடைய மொழி. மேலும் பப்புவா நியூ கினியாவில், அந்த நாட்டு மொழியில்,  மொழி பெயர்க்கப்பட்ட  திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன்” என்று அவர் கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்