// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையிலிருந்து கடல் வழியாக சென்ற 8 பேர் இந்திய கடலோர காவல் படையினராகே மீட்பு

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இலங்கை இந்திய கடற்பரப்பின் மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் 8 நபர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) குறித்த 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழி பாதை ஊடாக பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டு இன்று மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுவரை இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 134 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதோடு ஒரு மூதாட்டி உயிரிழந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்