day, 00 month 0000

தோனியின் ஓய்வு குறித்து அறிவித்த சிஎஸ்கே பயிற்சியாளர்

16-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் பிளே ஆப் சுற்று போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

அதன் பிறகு மே-28 ஆம் திகதி அகமதாபாத்தில் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்தே அனைவரது மத்தியிலும் பேசப்பட்டு வரும் விடயமாக இருப்பது தோனியின் ஓய்வு.

ஏனெனில் 41 வயதான தோனி இந்த தொடரில் கடைசியாக விளையாடுகிறார் என்பதனால் சென்னை அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு வருகின்றனர்.

அதேவேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் தோனியின் ஓய்வு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவ்வேளையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான மைக்கல் ஹஸ்ஸி தோனியின் ஓய்வு குறித்த முக்கிய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தோனி அவரது ஓய்வு குறித்து யாரிடமும் பேசிக்கொள்வதே இல்லை. அவர் கடைசி தொடரில் விளையாடுகிறாரா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

தற்போது வரை தோனி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டும் இன்றி பயிற்சியிலும் உத்வேகமாக ஈடுபடுகிறார். எனவே நிச்சயம் அவர் தொடர்ந்து விளையாடுமளவிற்கு தகுதியாகவே இருக்கிறார் என்று நான் கூறுவேன்.

மேலும் 5 ஆண்டுகள் கூட அவர் விளையாட வாய்ப்புள்ளது. ஆனால் தோனியின் ஓய்வு முடிவு அவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் எப்போதுமே தனது திட்டத்தை வெளிப்படையாக வைத்திருப்பவர் தோனி.

தன்னுடைய முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது ஓட முடியாமல் சிரமப்படுகிறார். அதேவேளையில் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதை மட்டுமே அவர் திட்டமாக வைத்துள்ளார்.

தோனியின் ஓய்வு பற்றி தெரிந்த ஒரே ஒரு நபர் யார் என்றால் அது அவரே தான். அவர் சொன்னால் தான் நமக்கு எந்தவொரு முடிவும் தெரியும்." என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்