day, 00 month 0000

தோனி மீது பதிவான 10 புகார்கள்

விளம்பர விதிமுறைகளை மீறியதாக தோனி மீது 10 புகார்கள் பதிவாகியுள்ளன.

விளம்பர விதிமுறைகளை மீறியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களில் பங்கேற்கும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

பொருள்கள் அல்லது சேவைகள் தொடர்பாக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும் பிரபலங்கள் அது குறித்த உண்மைத்தன்மையை உறுதிப் படுத்திக் கொண்டு வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டணம் பெற்று விளம்பரம் செய்தால் அந்த விளம்பரத்தில் கட்டணம் பெற்ற விளம்பரம் என தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் விளம்பரங்களை கண்காணிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபலங்கள் மீது கடந்த ஆண்டு 55 புகார்கள் வந்த நிலையில், தற்போது 503 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மீது 10 புகார்களும், யூடியூப்பர் பூவன் பாம் மீது 7 புகார்கள்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்