day, 00 month 0000

சமூக வலைத்தள பதிவால் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு - 26 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை சமூக வலைத்தள பதிவால் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தங்கள் பலத்தை பயன்படுத்தி கும்பலை கலைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த, வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்