day, 00 month 0000

பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் - 8 பேர் காயம்! - கொழும்பில் பதற்றம்

கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சிலர் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்