day, 00 month 0000

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் முடிவை முறியடித்தே தீருவோம்

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்கியதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது இந்நாட்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் சீனர்கள் இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

உயிரியல் ஆராய்ச்சிக்காக குரங்குகளை இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவிருப்பதாகவும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்