day, 00 month 0000

பேரினவாதிகளிற்கு சார்பாக செயற்படும் தொல்பொருள் திணைக்களம்

 தமிழர்களின் பூர்விக நிலங்களை அபகரிப்பதும் அதில் விகாரைகளை அமைப்பதுடன், அரச மரங்களை நாட்டுவதும் தமிழினத்திற்கு செய்யும் துரோகம் என யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ஜெல்சின்  தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

வெடுக்குநாறி மலையில் லிங்கங்கள் மற்றும் சிலைகளை யார் உடைத்தனர் என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் ஓடிய வேளையில் இலங்கையின் வரைபடத்தில் வெடுக்குநாறி மலையிருந்த இடத்தில் பௌத்த விகாரை இருப்பதாக உடனடியாக  பதிவேற்றப்பட்டதாகவும் குறித்த பதிவு இன்றும் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

காலம் காலங்களாக தமிழர்கள் பூர்விகமாக வாழும் நிலங்களில் பௌத்த  விகாரையினையும், அரச மரத்தினையும் அமைப்பது என்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமே ஆகும்.

வடக்கு கிழக்கில் பண்பாடு விழுமியங்களை பேணி பாதுகாத்து வரும் சுழலில் கச்சத்தீவில் மக்களிற்கும்  அங்குள்ள குருக்களிற்கும் தெரியாத வகையில் மதில் போன்ற அமைப்பினை கட்டி அரசமரத்தினை அமைத்துள்ளனர்.

குறுந்தூர் மலை விவகாரத்திலும் சட்டங்களைனை மீறி விகாரையாது அங்கு கட்டப்பட்டுள்ளதாகவும் ஆதங்கம் வெளியிடுள்ளார்.

ஒரு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மதங்களினதும் இனங்களினதும் அடையாளங்களை பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களம் சிங்கள பௌத்த பேரின வாதத்திற்கு சார்பாக செயற்படுவதுடன் நாட்டில் வெவ்வேறு கலாசாரங்கள் ,மதங்கள் மற்றும் இனங்கள் என்பன இருப்பதனை மறந்து விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களும் மக்களுடன் இணைந்து பௌத்த பேரினவாதம் மற்றும் நில அபகரிப்பிற்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்