// print_r($new['title']); ?>
நிலநடுக்கம், ஜாவா கடலில் மூழ்கும் அபாயம் என பல அச்சுறுத்தல்கள் காரணமாக, தலைநகர் ஜகார்த்தாவை கைவிட்டுவிட்டு, இந்தோனேசிய தலைநகராக போர்னியோவை மாற்றும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நெரிசல், காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகதார்த்தாவுக்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால் விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022 ஆம் ஆண்டு மத்தியிலேயே புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டது.
தற்போது, இந்தோனேசிய அரசானது, ஜகார்த்தாவை காலி செய்துகொண்டு போர்னியோ தீவை நோக்கி நகர்கிறது.
பசுமையான தீவுப் பகுதியை தலைநகராக மாற்றுவதற்கு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். வனப்பகுதி அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
எனினும் தலைநகரை மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
ஜகார்த்தா வேகமாக கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் நிலத்தடி நீர் மற்றும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.