day, 00 month 0000

உலகின் துணிச்சலான பெண்ணுக்கான அங்கீகாரத்தை பெற்ற ஈழத்து பெண்

உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா வெள்ளை மாளிகையில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலகில் துணிச்சலான பெண்களாக 2023 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு வௌ்ளை மாளிகையில் நடைபெற்றது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு நடத்தப்படுவதுடன், 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்பட்டனர்.

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வாழ்த்து இதன்போது, 2021 ஆம் ஆண்டு உலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ரனித்தா ஞானராஜா இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகின்ற சட்டத்தரணியாவார்.

இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜாவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்