day, 00 month 0000

நைஜீரியாவில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 54 பேர் பலி

நைஜீரியாவில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வன்முறை இடம்பெற்று வருவது வழக்கமாகவுள்ளது.

குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை
இந்த நிலையில், நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே இன்று பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கால்நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை எனவுமு் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நசராலா மாகாண ஆளுநர் அப்துல்லாஹி கூறுயதாவது,

"இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்