// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கனடாவுக்கு புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி

கனடாவுக்கு புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு கனேடியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள பூஞ்சை நிறைந்த சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாதம் ஒன்றிற்கு 1,600 டொலர்கள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கும்.

வெறும் ஒரு Caesar சாலடுக்கு 42 டொலர்கள் கொடுக்கவேண்டியிருக்கும். மணிக்கு 15 டொலர்கள் ஊதியம் கிடைக்கும். ஆனால், எல்லாவற்றிற்கும் வரி செலுத்தவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களை போலவே New Democratic Party (NDP) கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங்கும் விலைவாசி உயர்வு குறித்து தனது கோபத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பேராசை பிடித்த மளிகைக்கடை செல்வந்தர்கள் கொள்ளையடிப்பதற்காக பணவீக்கத்தைப் பயன்படுத்திக்கோள்வதால் தானே இந்த நிலை? லிபரல் கட்சியினரும் கன்சர்வேட்டிவ் கட்சியினரும் அப்படிச் செய்ய அவர்களை அனுமதிக்கிறீர்கள். இது தவறு, அநீதி என்று கூறிப்பிட்டுள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்