cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

ஓய்வுபெற்ற இராணுவ மேஜருக்கு நான்கு ஆண்டு கடூழிய சிறை

நீதிமன்றத் அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு உயர் நீதிமன்றம் நேற்று நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் அஜித் பிரசன்ன உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததாக கூறப்படும் கருத்தை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பீ.பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, எஸ்.துரைராஜா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த தொகையை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மூன்று நீதியரசர்களில் காமினி அமரசேகர, நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

எனினும் பெரும்பான்மை நீதியரசர்களின் தீர்ப்புக்கு அமைய அஜித் பிரசன்னவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
விசாரணைகளில் அஜித் பிரசன்னவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதாக நீதியரசர்கள் அறிவித்தனர். இதனையடுத்து நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதியரசர்கள், மூன்று லட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்