cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

மக்களின் விருப்புக்கு மாறாக பிரிந்துள்ள கட்சிகளுக்கு தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்

மக்கள் ஒற்றுமையையே விரும்புகின்றார்கள், அந்த ஒற்றுமைக்கு மாறாக பிரிந்து நிற்கும் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் தக்கபாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி களமிறங்கியுள்ளது.

தமிழ் மக்கள் ஒரு ஐக்கியப்பட்ட சூழ்நிலையை விரும்பி இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஒரு சிலர் தங்களுடைய ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தனிவழியில் சென்றிருக்கிறார்கள்.

ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த ஒன்றரை வருட காலமாக அதனை உருவாக்க நாங்கள் பேசுபொருளாக இருந்து வந்தாலும் தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாகத் தனித்து நிற்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது.

இப்போது அவ்வாறு தனிமையிலும் சென்றிருக்கின்றார்கள். இன்னும் ஒன்றரை மாதத்தில் மக்கள் தங்களுடைய தீர்ப்புகளை வழங்கி உருவாக்கப்பட்ட கூட்டணியுடன் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இணைந்து பயணிக்கச் செய்வார்கள் என்று நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்