day, 00 month 0000

வரலாற்றில் இடம்பிடித்த மைத்திரி

இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக, ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு பதிவாகி உள்ளது.

நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய இரண்டாவது தீர்ப்பு இது என உயர் நீதிமன்ற பதிவுகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, ஷிராணி திலகவர்தன மற்றும் நிமல் திஸாநாயக்க ஆகிய மூவரடங்கிய அமர்வில் 20 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

சர்வதேச ரெம்சா சுற்றாடல் சாசனத்தை மீறி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் காணியை ரொனி பீரிஸுக்கு வழங்கியமை தொடர்பான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பில் முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக பாரிய அபராதம் விதிக்கப்பட்டது இதுவாகும்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேன பத்து கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவரது அரசாங்கத்தில் இருந்த பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்